Skip to content

Opening book details…

Can I read பாடுங்குயில் கவிதைகள் on EtoBox?

பாடுங்குயில் கவிதைகள் by முடியரசன் is a nonfiction available to read on EtoBox.

What is பாடுங்குயில் கவிதைகள் about?

இயற்கை எழில் காணுங்கால் இன்பம் பெறுகிறான். மற்றவர் துயரப்படுங்கால் துன்பமடைகிறான். கொடுமை கள் காணும் பொழுதெல்லாம் குமுறி எழுகிறான். இவ்வாறு இன்பம், துன்பம், குமுறல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பொங்கியெழும் அவ்வுணர்ச்சிகளை வெளிக் காட்டக் குரல் கொடுக்கிறான். அக்குரல்தான் கவிதை யென்று உலகத்தாற் கொண்டாடப் பெறுகின்றது. போகட்டும்; நாட்டுச் சூழ்நிலை, வீட்டுச்சூழ்நிலை இவற்றின் தாக்குதல்களுக்கு இலக்கான என் மனத்திலும் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றின. உறுத்திக் கொண்டேயிருந்த அந்த உணர்ச்சிகள் நேரம் வாய்க்கும் பொழுது பாடல்களாக வெளிப்பட்டன. அப்பாடல்கள் மெல்லிசைப் பாடல்கள். ஆம்; புது முறை பாடல்கள். ஆயினும் தாளம் தப்பாதவை; ஒரு கட்டுக் கோப்புக்கள் அடங்கி நடப்பவை. செவி சாய்த்துக் கேட்டுப்பாருங்கள். அவ்வுண்மை புலனாகும். கற்பனை வளமும், பொருள் நலமும் செறிய எழுதும் இளைஞர்பன இன்று கவிதை உலகிலே உலாவரல் கண்டு மகிழ்ச்சி பெருக் கொள் தோடுகிறது. ஆயினும் கவிதை என்ற பெயரால் உரைநடைகளை எழுதுவது கண்டு அம்மகிழ்ச்சி வற்றி வறண்டு போய் விடுகிறது. வழி தவறிச்செல்லும் அவர்களுக்கு இந்நூல் நேர்வழி காட்ட உற்ற துணையாகும் என்று நம்புகின்றேன். அன்பன், ------- பாடுங்குயில் கவிதைகள் - முடியரசன்

Who reads பாடுங்குயில் கவிதைகள்?

It is typically read by self-directed learners exploring a subject in depth.

Common subject areas: history, science, philosophy, social sciences.

Author
முடியரசன்
Publisher
அகரம்
Published
1983
Language
TA
Category
nonfiction
Subjects
Poetry, Humanities